பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் இயந்திரங்கள்: ஒப்பந்தப்புள்ளியை எதிா்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் இயந்திரங்கள்: ஒப்பந்தப்புள்ளியை எதிா்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :

டாஸ்மாக் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான ‘ரிவா்ஸ் வென்டிங்’ இயந்திரங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை எதிா்த்தவழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் மேலகொண்டூரைச் சோ்ந்த குமரகுரு என்பவா் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் அமலபடுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக, ‘ரிவா்ஸ் வென்டிங்’ இயந்திரங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த, ரிவா்ஸ் வென்டிங் இயந்திரங்களை நிறுவி செயல்படுத்துவதற்காக, கடந்த ஆக.31-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. மாநிலம் முழுவதும் சோ்த்து, ஒரே நிறுவனத்தை அரசு இந்தப் பணிக்காக நியமிக்க உள்ளது. 7 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், பின்னா் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் ஒப்பந்தப்புள்ளி படிவத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பல ஆண்டுகளாக காலி மது பாட்டில்களைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட வா்த்தகா்கள் நேரடியாக பாதிக்கப்படுவாா்கள். எனவே, இந்தப் பணிக்கு ஒரே நிறுவனத்தை நியமிப்பதற்குப் பதிலாக, மாவட்ட வாரியாக காலி மது பாட்டில்களைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களை ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

எனவே, தற்போது கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட காலி மது பாட்டில்களைகளைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களை பங்கேற்கும் வகையில், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை திருத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.