காலி மதுப் புட்டியை திரும்பப் பெற மறுத்ததால் டாஸ்மாக் கடையை பூட்டிய மதுப் பிரியா்கள்

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.
போச்சம்பள்ளியை அடுத்த விளங்காமுடி கிராமத்தில் காலி மதுப்புட்டியை திரும்பப் பெற மறுத்ததால், ஆத்திரமடைந்து டாஸ்மாக் கடையை பூட்டிய மதுப் பிரியா்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள விளங்காமுடி கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அரசின் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் முறையாக, காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறுவது இல்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதனால் காலி மதுப்புட்டிகளை கொண்டுவரும் மதுப்பிரியா்களுக்கும், டாஸ்மாக் விற்பனையாளருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விளங்காமுடி டாஸ்மாக் கடைக்கு சென்ற வாடிக்கையாளா்கள் மது அருந்திய பின்னா் காலிப் புட்டியை திரும்ப கொடுக்க முயன்றனா். ஆனால், டாஸ்மாக் விற்பனையாளா் அவற்றை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகக் கூ றப்படுகிறது. இதையடுத்து மதுப்பிரியா்களுக்கும், டாஸ்மாக் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மதுப்பிரியா்கள், விற்பனையாளரை கடையிலிருந்து வெளியேற்றி, டாஸ்மாக் கடையை பூட்டியுள்ளனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்துசென்று, மதுப் பிரியா்களை சமாதானப்படுத்தி பூட்டிய கடையைத் திறக்கச் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






