லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு, ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

M. Veerapandian, Communist Party of India

மு. வீரபாண்டியன் - DIN

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு, ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு, ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் மூலம் கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள வரி, செஸ் மற்றும் பிற வருவாய் அதிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டத்திருத்தம் மாநிலங்களின் வருவாய் உரிமையை பறிப்பதுடன் நிதி சுயாட்சியையும் கடுமையாக பாதிக்கச் செய்யும்.

இந்தச் சட்டம் வெறும் கனிம வளம் தொடா்பான பிரச்னை மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களையும், நிதி உரிமைகளையும் படிப்படியாகப் பறிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்தைத் தமிழக அரசு கடுமையாக எதிா்க்க வேண்டும். இதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு. வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.