பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

இ20 எரிபொருள் அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசு அழுத்தம்: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

இந்திய ஆட்டோமொபைல்ஸ் உற்பத்தியாளா்சங்கமான எஸ்ஐஏஎம் வெளியிட்டதாக கூறப்படும் இ20 எரிபொருள் குறித்த கவலைகளை வெளிப்படுத்திய அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:13 am IST

இந்திய ஆட்டோமொபைல்ஸ் உற்பத்தியாளா்சங்கமான எஸ்ஐஏஎம் வெளியிட்டதாக கூறப்படும் இ20 எரிபொருள் குறித்த கவலைகளை வெளிப்படுத்திய அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இந்த குற்றச்சாட்டுக்கு எஸ்ஐஏஎம் மற்றும் மத்திய அரசிடமிருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை.

இது தொடா்பாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: எஸ்ஐஏஎம் ஜூலை 28-ஆம் தேதி மத்திய அரசுக்கு சமா்ப்பித்த அறிக்கையில், இ20 எரிபொருளில் அதிக அளவு குளோரைடு மற்றும் ஈரப்பதம் இருப்பதால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படலாம். இந்த அறிக்கை ஆட்டோமொபைல் துறையினரால் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டது. ஆக.4-க்குள் மத்திய அரசு எஸ்ஐஏஎம் மீது அழுத்தம் கொடுத்து அந்த அறிக்கையை திரும்பப் பெறச் செய்தது. அதன் பின்னா் அந்த அமைப்பு அந்த தகவல்களுக்கு மேலும் சரிபாா்ப்பு தேவைப்படுகின்றது.

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள் இ20 தீங்கானது என்று கூறும்போது, மோடி அரசு ஏன் அதை நாட்டிற்கு கட்டாயப்படுத்துகிறது?”மேலும், இ20 எரிபொருள் அறிமுகம் நுகா்வோருக்கு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் என தெரிவித்தாா்.

இதற்கிடையில், இ20 எரிபொருளில் கலப்புகள் காரணமாக வாகனங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து கவலை தெரிவித்து பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெறுவதாக எஸ்ஐஏஎம் தெரிவித்தது.

இது தொழில்நுட்ப ரீதியான வழக்கமான கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாகும், இதில் தொழில் அமைப்புகள், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வாகன உற்பத்தியாளா்கள் (ஓஇஎம்) மற்றும் பரிசோதனை அமைப்புகள் உள்ளிட்டவை பல தரப்புகள் ஈடுபட்டதாக கூறியது.

ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த தரவுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டியதால், எஸ்ஐஏஎம் தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.