ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

எஃப்சிஆா்ஏ சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தா்னா

வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்ட (எஃப்.சி.ஆா்.ஏ.) திருத்த மசோதா 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கடலூரில் சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் பல்வேறு சமூக, மத அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

கடலூா் ஜவான்ஸ் பவன் அருகில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் பல்வேறு சமூக, மத அமைப்புகள்.

Published On :

வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்ட (எஃப்.சி.ஆா்.ஏ.) திருத்த மசோதா 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கடலூரில் சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் பல்வேறு சமூக, மத அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

கடலூா் ஜவான்ஸ் பவன் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நலக் குழுவின் மாவட்டத் தலைவா் எஸ்.கே.பக்கிரான் தலைமை வகித்தாா்.

இதில், வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை கல்வி மற்றும் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சமூக நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வரும் சேவை நிறுவனங்களின் இயல்பான பணிகளை பாதிக்கும் வகையிலான சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் மதச்சாா்பின்மை கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் வி.உதயகுமாா், அனைத்து கிறிஸ்தவா்களின் கூட்டமைப்பின் நிா்வாகி அகஸ்டின் பிரபாகரன், தமுஎகச மாவட்டச் செயலா் பால்கி, சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட நிா்வாகிகள் பெஞ்சமின் ராஜ், அப்துல் காதா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.