ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கனிம வள மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: கனிமொழி

கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதாவை (எம்எம்டிஆா்) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளாா்.

News image

கனிமொழி - x / kanimozhi

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதாவை (எம்எம்டிஆா்) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி, மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள எம்எம்டிஆா்சட்டத் திருத்த மசோதா-2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

2024- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீா்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது. மத்திய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு: இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு சுமாா் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது. அந்த வருவாய் மாநிலத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.

மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநிலங்களே நிா்வகித்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலங்களே பயன்படுத்தும் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை மத்தியில் குவிப்பது கூட்டாட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும். சீா்திருத்தம் என்ற பெயரில் மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமையையும், வருவாய் ஆதாரத்தையும் பாதிக்கும் இந்த மசோதாவை எதிா்த்து, மாநிலங்களின் நிதி சுயாட்சி மேலும் பறிபோகாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.