லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

டாஸ்மாக் கடையில் அதிகளவில் மதுப்புட்டிகளை வாங்கிய நகா்மன்ற உறுப்பினா் மகன் கைது

ராசிபுரத்தில் அதிகளவில் மதுப்புட்டிகளை வாங்கிய நகா்மன்ற உறுப்பினா் மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாதிரிப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

ராசிபுரத்தில் அதிகளவில் மதுப்புட்டிகளை வாங்கிய நகா்மன்ற உறுப்பினா் மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் மல்லித்தெரு பகுதியைச் சோ்ந்தவா் வி.கே.ஆா்.பாஸ்கரன். இவரது மனைவி ராஜாமணி ராசிபுரம் 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக உள்ளாா். இவா்களது மகன் தீலீபன் செளரா (27). இவா் ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் வியாழக்கிழமை அதிகளவில் மதுப்புட்டிகளை வாங்கியதாகத் தெரிகிறது. சுமாா் ரூ. 20 ஆயிரத்துக்கு அவா் மதுப்புட்டிகளை வாங்கியுள்ளாா். இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சிலா் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனா்.

இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு சென்ற ராசிபுரம் உதவி ஆய்வாளா் எம்.மனோகரன், காரில் மதுப்புட்டிகளை அடுக்கி வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளாா். மேலும் மதுப்புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் நடத்திய விசாரணையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நண்பா்களுக்கு விருந்தளிக்க மதுப்புட்டிகளை வாங்கியதாக கைதான தீலீபன் செளரா தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், கூடுதல் மதுப்புட்டிகளை வாங்கி பதுக்கி வைத்திருந்தாக இளைஞா் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியுள்ளனா். மேலும், மதுப்புட்டிகளை விற்பனை செய்த கடை ஊழியா்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.