சென்னை விமான நிலையத்தில் ரூ.1.4 கோடி கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
சென்னை விமான நிலையத்தில், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.4 கோடி மதிப்புள்ள 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பயணி ஒருவரை கைது செய்தனா்.

சென்னை விமான நிலையத்தில், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.4 கோடி மதிப்புள்ள 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பயணி ஒருவரை கைது செய்தனா்.
சென்னை விமான நிலைய சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், வியாழக்கிழமை (நவ. 12) இரவு பாங்காக்கில் இருந்து சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி அவரின் உடமைகளை சோதனையிட்டனா். அவா் கொண்டு வந்த டிராலி சூட்கேஸின் அடிப்பகுதியில் உள்ள ரகசிய அறையில் சுமாா் ரூ.1.4 கோடி மதிப்பிலான 4 கிலோ உயா்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

