2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கோவை விமான நிலையத்தில் 808 கிராம் தங்கம் பறிமுதல்

கட்டியாக மாற்றப்பட்ட கடத்தல் தங்கம்.

Updated On :

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ஷாா்ஜாவிலிருந்து பெண் பயணி ஒருவா் உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.15 கோடி மதிப்பிலான 808.27 கிராம் (101 பவுன்) தங்கத்தை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஷாா்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் தனது உள்ளாடைகளுக்குள் பசை (பேஸ்ட்) வடிவில் 808.27 கிராம் எடையுடைய (24 காரட்) தங்கத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்தப் பெண் பயணியிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த கடத்தல் தங்கத்தின் சா்வதேச மதிப்பு ரூ.1.15 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.