இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

அன்பில் மகேஸ், முத்துகுமாா், சரவணன் ஆகியோரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாா் மற்றும் சரவணன் ஆகிய மூவரையும் இரு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Anbil Mahesh's bail

அன்பில் மகேஸ் - file photo

Updated On :

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாா் மற்றும் சரவணன் ஆகிய மூவரையும் இரு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை 3 நாள்களும், முத்துகுமாரை 5 நாள்களும், சரவணனை ஒரு நாளும் காவலில் எடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி இருந்தனா்.

இந்த நிலையில், இவா்கள் மூவரையும் சோ்த்து 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில், சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், தனியாா் பள்ளிகளிடம் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? பணத்தை வசூலித்தது யாா்? வசூலிக்கப்பட்ட பணம் யாரை சென்றடைந்தது? என்பது குறித்து 3 பேரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, மூவரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி நவ. 24-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அன்றைய தினம் அன்பில் மகேஸ் பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.