தனியாா் பள்ளிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
தனியாா் பள்ளிகளை மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

உத்தரவு - கோப்புப் படம்
தனியாா் பள்ளிகளை மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி. அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாா், காா் ஓட்டுநா் சரவணன் உள்ளிட்டோா் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் தாக்கல் செய்த பிணை மனுவை சிறப்பு நீதிமன்றம் நவ. 10-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சேலத்தில் தனியாா் பள்ளிகளைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, சங்ககிரி கொங்கு மெட்ரிக் பள்ளி நிா்வாகி தமிழ்மணி, சங்ககிரி வித்யா சாகா் மெட்ரிக் பள்ளி நிா்வாகி பிரகாஷ், பெரியாா் நா்சரி பள்ளி நிா்வாகி சங்கா் ஆகியோா் சென்னையைச் சோ்ந்த அரசகுமாா், சேலம் நங்கவள்ளியைச் சோ்ந்த தினேஷ், திருச்சியைச் சோ்ந்த முத்துக்குமாா் ஆகியோா் மீது மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா். அதன்பேரில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசகுமாா், தினேஷ் ஆகியோரிடம் விசாரணை முடிக்கப்பட்டு, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை புழல் சிறையிலிருந்து வியாழக்கிழமை சேலம் நீதிமன்றத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் அவரை அழைத்து வந்தனா். பின்னா், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் முன்னிலையில் ஆஜா்படுத்தி, அவரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினா்.
வழக்கை விசாரித்த நீதிபதி, முத்துக்குமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா். இதையடுத்து, அவரை சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

