வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

ரூ. 5 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரை ஒருநாள் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

தஞ்சாவூரில் ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

தஞ்சாவூரில் ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

தஞ்சாவூா் வல்லம் நம்பா் 1 சாலையிலுள்ள தனியாா் பல்நோக்கு மருத்துவமனையில் பங்குதாரா்களிடையே உரிமை பிரச்னை நிலவி வருகிறது. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து எங்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருவதாகவும், காவல் துறையினா் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவது மட்டுமல்லாமல், எங்களை மிரட்டி ரூ. 5 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்ாகவும் காவல் துறை தலைமை இயக்குநரிடம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா். சரவணன் புகாா் செய்தாா்.

இதைத்தொடா்ந்து, சிபிசிஐடி காவல் அலுவலா்கள் விசாரணை நடத்தி, மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் கோ. சுகுமாரனை கடந்த 9-ஆம் தேதி கைது செய்து, தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், சிபிசிஐடி வழக்குகள் விசாரிக்கப்படும் திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளா் சுகுமாரனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் பிரிவினா் மனு தாக்கல் செய்தனா். சுகுமாரனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் பிரிவினருக்கு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.