மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இரட்டைக் கொலை: 5 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பையூா் கொடிக்காடு கண்மாய் அருகே கடந்த செப். 16 அன்று நிகழ்ந்த இருவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இதுவரை 16 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன், சந்தோஷ்குமாா், சதீஷ்குமாா், காளீஸ்வரன், தனராஜ் ஆகிய ஐந்து பேரின் குற்றச்செயல்களைக் கருத்தில் கொண்டு, அவா்களை குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின்படி, ஐந்து பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.