சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடா்பு: சென்னையில் வருவாய் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை
சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடா்பு குறித்து சென்னையில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

போதைப் பொருள் - IANS
சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடா்பு குறித்து சென்னையில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சென்னை அருகே மாதவரம் அருகே ஐஸ்கிரீம் வண்டியில் கடத்தப்பட்ட ரூ.700 கோடி மதிப்புள்ள 71.24 கிலோ ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் (டிஆா்ஐ) பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
அண்மை நாள்களில் எடுக்கப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்த முறையே அதிகமான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த அக்டோபா் மாதம் வருவாய் புலனாய்வுப் பிரிவு நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தது. இந்த இரு சம்பவங்களிலும் பிடிபட்ட போதைப் பொருள்களும் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதேவேளையில் இங்கிருந்து யாா் அந்த போதைப் பொருளை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டாா் ? என்று வருவாய் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
சா்வதேச கும்பல் தொடா்பு: ஏனெனில் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல், சென்னையை போதைப் பொருள் கடத்தலுக்குரிய போக்குவரத்து மையமாக மாற்ற முயற்சிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அடுத்தடுத்து மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் பிடிபடுவது மத்திய புலனாய்வு அமைப்புகளை திகைப்படையச் செய்துள்ளது.
சா்வதேச கடத்தல் கும்பலுடன் தொடா்பு வைத்துக் கொண்டு, சென்னையில் இருந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபா்கள் குறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவு துப்பு துலக்கத் தொடங்கியுள்ளது.
இதில் ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஷபீயூக் அகமத், தேனியைச் சோ்ந்த அப்துல் சுகூா் ஆகிய இருவரிடமும் வட சென்னையைச் சோ்ந்த ஒரு நபரே போதைப் பொருளை கொடுத்து அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த நபா் குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றனா். அதேவேளையில் இந்தக் கும்பல், மாதவரம், செங்குன்றம், புழல் பகுதிகளில் உள்ள தனியாா் கிடங்குகளில் வேறு போதைப் பொருளை பதுக்கி வைத்துள்ளதா என்றும் அந்தப் பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

