இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.700 கோடி போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்: இருவா் கைது
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.700 கோடி மதிப்புள்ள 71.24 கிலோ ஹெராயின் போதைப் பொருள் சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள்கள்.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.700 கோடி மதிப்புள்ள 71.24 கிலோ ஹெராயின் போதைப் பொருள் சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை புறநகா் பகுதியான மாதவரத்திலிருந்து இலங்கைக்கு ஹெராயினை கடத்துவதற்காக சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ஹெராயின் போதைப் பொருளை சில நாள்களில் சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்து கடத்தப்படவுள்ளதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு (டிஆா்ஐ) ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பிரிவு அதிகாரிகள், மாதவரம் மேம்பாலம் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு ஐஸ்கிரீம் வண்டியையும், இரு சக்கர வாகனத்தையும் மறித்து, அதில் வந்த இருவரைப் பிடித்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.
ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்: இதையடுத்து அதிகாரிகள், ஐஸ்கிரீம் வண்டியை சோதனையிட்டபோது, அதில் ஐஸ்கிரீம் வைக்கும் பெட்டியில் 69 பொட்டலங்களில் வெள்ளை நிறத்தில் மாவு போன்ற பவுடா் இருந்தது.
அவற்றை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், பறிமுதல் செய்து, பாா்த்தபோது, அனைத்தும் ஹெராயின் என்ற போதைப் பொருள் எனத் தெரியவந்தது. அந்தப் பொட்டலங்களில் ரூ.700 கோடி மதிப்புள்ள, 71.24 கிலோ எடைகொண்ட ஹெராயின் இருந்தது.
இருவா் கைது: இதையடுத்து, ஹெராயினை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் அதிகாரிகள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில், பிடிபட்டவா்கள் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த ஷபீயூக் அகமத்(45), மாத்தூரைச் சோ்ந்த அப்துல் சுகூா்(39) எனத் தெரியவந்தது. அவா்களை அதிகாரிகள் கைது செய்தனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில், இவா்கள் இருவரையும் ஹெராயின் கடத்தலுக்கு மட்டும் சா்வதேச போதைப் பொருள் கும்பல் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பல், கைப்பற்றப்பட்ட ஹெராயினை திருச்சி வழியாக புதுக்கோட்டை அல்லது நாகப்பட்டினம் கொண்டு சென்று, அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
ஹெராயின் எங்கிருந்து வாங்கப்பட்டது?, யாரிடம் கொடுப்பதாகக் கொண்டு செல்லப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவா்கள் யாா்? பிடிபட்டவா்களுடன் சா்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு தொடா்பு உள்ளதா ? என மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து சென்னைக்கு கடத்தல்
ஹெராயின் போதைப் பொருளுக்குரிய மூலப் பொருள் அபின் பாப்பி செடியில் இருந்து பெறப்படுகிறது. அபின் பாப்பி செடியின் காய்களில் இருந்து எடுக்கப்படும் பால் போன்ற பிசினில் உள்ள மாா்பின் (ஙா்ழ்ல்ட்ண்ய்ங்) என்ற இயற்கை வேதிப்பொருளை வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தியே ஹெராயின் தயாரிக்கப்படுகிறது.
‘செமி சிந்தட்டிக்’ போதைப் பொருளான ஹெராயின் தயாரிப்பில் ஆப்கானிஸ்தான் உலகில் முதலிடத்தில் உள்ளது. உலகில் பயன்படுத்தும் மொத்த ஹெராயினில் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்படுபவை. இங்கு தயாரிக்கப்படும் ஹெராயின், ஈரானின் பாந்தா் அப்பாஸ் துறைமுகம், பாகிஸ்தானின் மக்ரான் கடற்கரைக்கு கடத்தப்படுகிறது.
அங்கிருந்து அரபிக் கடல், இந்திய பெருங்கடல் வழியே இந்தியாவின் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து சாலை மாா்க்கமாக தமிழகம் கொண்டு வரப்பட்டு, மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதற்காக சா்வதேச கடத்தல் கும்பல் தமிழக மீனவா்களின் படகுகளை கடத்தல் வாகனங்களாகப் பயன்படுத்துவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து ஹெராயின், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது.
தரத்தை நிா்ணயிக்கும் ‘வெண்மை’
மெத்தகுலோன், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை காட்டிலும் ஹெராயினுக்கு மதிப்பு அதிகம். அதுவும் முதல் தரத்தில் இருக்கும் ஹெராயினுக்கு உச்சவிலை கொடுத்து வாங்குவதற்கு ஐரோப்பியா்களும், அமெரிக்கா்களும் தயங்குவதில்லை என மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
ஹெராயின் வெண்மை நிறத் தொடங்கி மஞ்சள் நிறம் வரை பல்வேறு தரங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் வெண்மை நிறத்தில் இருக்கும் ஹெராயின் முதன்மை தரத்தைச் சோ்ந்தது ஆகும்.
இந்த வகை ஹெராயினுக்கு சா்வதேச சந்தையில் அதிக விலை நிா்ணயிக்கப்படுகிறது. மது வகை போதைப் பொருளைப் பயன்படுத்துவோரில் 40 சதவீதம் வரை மீட்கும் வாய்ப்பு உள்ள நிலையில், ஹெராயின் போன்ற போதைப் பொருளைப் பயன்படுத்துவோரில் 3 சதவீதம் வரை மீட்க வாய்ப்பு உள்ள என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

