மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு: ஞானசேகரன் தம்பியை தேடும் போலீஸார்

சென்னை கோட்டூர்புரத்தில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருக்கும் ஞானசேகரனின் தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓணம் பம்பர் லாட்டரி! முதல் பரிசு ரூ.30 கோடியில் கையில் கிடைப்பது எவ்வளவு?

பண நோட்டுகள் - dps

Updated On :

சென்னை கோட்டூர்புரத்தில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருக்கும் ஞானசேகரனின் தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை டாக்டர் விஜயராகவலு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அ.யாசின் (39). இவர், ஜாம்பஜார் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சிறிதாக நகைக் கடை வைத்துள்ளார். யாசினின் நண்பர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சி.நூருதீன் (37).

நூருதீன், வியாழக்கிழமை யாசினை தொடர்புகொண்டு, தனது நண்பருக்கு சொந்தமான தங்க நகை ரூ.10 லட்சத்துக்கு அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீட்க ரூ.10 லட்சம் கொடுத்தால், நகையை மீட்டு விற்ற பின்னர் ரூ.10.50 லட்சம் தருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, யாசின், ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு கோட்டூர்புரம் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்றபோது அங்கு நூருதீன், கோட்டூர்புரம் மண்டபம் சாலைப் பகுதியைச் சேர்ந்த தா.சுரேஷ் (34),கொட்டிவாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கு.பிரசாந்த் (30) ஆகியோர் இருந்தனர்.

யாசின், ரூ.10 லட்சத்தை பிரசாந்திடம் கொடுத்துள்ளார். அவர் அந்தப் பணத்தை சுரேஷிடம் ஒப்படைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சுரேஷ், நூருதீன், பிரசாந்த் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் சுரேஷ், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருக்கும் ஞானசேகரனின் தம்பி என்பது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டூர்புரம் போலீஸார், பிரகாஷிடமிருந்து ரூ.10 லட்சத்தை மீட்டனர். சுரேஷ் உள்ளிட்ட பிற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.