ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

செஞ்சி சிறுமியை தேடும் பணி தீவிரம்! சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் விசாரணை!

செஞ்சி சிறுமி வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை.

cbcid

சிறுமியின் தாயிடம் விசாரணை மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீஸார். - படம்: தினமணி

Updated On :

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியை பள்ளிக்கு அழைத்துச் சென்று, சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில், 14-ஆம் நாளாக சிறுமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலம்பூண்டி நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி (7). இவர், கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு, பெற்றோருடன் தூங்கினார். மறுநாள் அதிகாலை சிறுமி மாயமானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுமியைக் கண்டறியமுடியவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆலம்பூண்டியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சனிக்கிழமை 3-ஆம் நாளாக சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை சேகரித்தனர். மேலும், நடுப்பட்டு, ஆலம்பூண்டி காடு, மலைகளில் தேடினர். திருவண்ணாமலை சாலை வழிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகள் மற்றும் கைப்பேசி கோபுர சிக்னல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாயமான சிறுமி ஹேமாவதி படித்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சிபிசிஐடி போலீஸார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் பள்ளி வருகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பள்ளியில் உள்ள ஒரு தனி அறையில் சிறுமியின் தாய் பவானியிடம் சுமார் 7 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் நேற்று (அக். 26) விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ஆலம்பூண்டி அருகிலுள்ள பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரையை, சிறையிலிருந்து அழைத்து வந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமி பயின்றுவந்த பள்ளிக்கு அழைத்து சென்று, அங்கும் ராஜதுரையை விசாரித்தனர்.

Summary

In the case of the missing girl from Gingee, the CB-CID conducted an investigation by taking a habitual offender—listed in the police history register—to the school.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER