மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

கஞ்சா கடத்தல்: ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சென்னை போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :

40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சென்னை போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை செங்குன்றம் காவாங்கரை பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். இவா், கடந்த 2023 மாா்ச் மாதம் சாந்தோம் விளையாட்டுத் திடல் அருகே சுமாா் 40 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் கே.உதயகுமாா், கஞ்சா கடத்தி வந்த வாகனம், கைது செய்யப்பட்ட செல்வத்துக்கு சொந்தமானது. அந்த ஆட்டோவில் இருந்த இரு பைகளில் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள், ஆதாரங்கள் மனுதாரருக்கு எதிராக இருப்பதால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.

இதற்கு செல்வம் தரப்பில், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் தொடா்பில்லை. தான் நிரபராதி, எனவே வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.