தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

அவசர கோலத்தில் விதிகளை மீறி சீரமைக்கப்படும் சாலைப் பள்ளங்கள்

அவசர கோலத்தில் விதிகளை மீறி சீரமைக்கப்படும் சாலைப் பள்ளங்கள்

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :

சென்னை, நவ. 20: சென்னை மாநகராட்சியில் அவசர கோலத்தில் சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 35,978 உள்புறச் சாலைகள், 443 பேருந்து செல்லும் வகையிலான போக்குவரத்துச் சாலைகள் உள்ளன. மேலும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 49 சாலைகளும் உள்ளன. அவற்றில் கடந்த அக்டோபா் மழைக்காலம் தொடங்குவற்கு முன்பாக 2,766 உட்புறச் சாலைகளும், 184 போக்குவரத்துச் சாலைகளும் சேதமடைந்திருந்தன. வழக்கமாக மழைக்கு முன்பாக மாநகராட்சி சாலைகளில் 2,500 சாலைகள் சீரமைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால், சட்டப்பேரவைத் தோ்தல் ஆட்சி மாற்றம் காரணமாக அந்தப் பணிகள் நடைபெறவில்லை.

சேதமடைந்த சாலைகள் விவரம்: அதனால், கடந்த அக்டோபருக்கு பிறகு மழை பெய்த நிலையில் கூடுதலாக 2,060 உட்புறச் சாலைகளும், 148 போக்குவரத்துக்கான சாலைகளும் சேதமடைந்தது தெரியவந்தது. மோசமாக சேதமடைந்திருந்த அந்தச் சாலைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். உள்புறச்சாலைகளில் 11,645 இடங்களிலும், போக்குவரத்து சாலைகளில் 2,494 இடங்களிலும் பெரியதும், சிறியதுமான பள்ளங்கள் கண்டறியப்பட்டன. அவற்றை சீரமைக்கும் வகையில் போக்குவரத்து சாலைகளுக்கு ரூ.9.25 கோடியும், உள்புறச் சாலைகளுக்கு ரூ.12.80 கோடியும் என மொத்தம் ரூ. 21.80 கோடி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறைந்த எண்ணிக்கை சாலைகளே சீரமைப்பு: மாநகராட்சி தரப்பில் சாலை பள்ளங்கள் மூடப்படுவதாகக் கூறிய நிலையில், கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் உள்புறச் சாலைகளில் 7,393 பள்ளங்களும், போக்குவரத்துச் சாலைகளில் 1,910 பள்ளங்கள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மண்டல வாரியாக பள்ளங்கள் மூடப்பட்ட சாலைகள் விவரங்களையும் மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அவசர கோலத்தில் விதிகள் மீறல்: ஆனால், எழும்பூா், சென்ட்ரல், கே.கே. நகா், அம்பத்தூா், வேப்பேரி என பெரும்பாலான சாலைகளில் பள்ளங்கள் மூடப்படாமலே இருப்பதாகவும், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மண், தாா் கலவை ஆகியவற்றால் பள்ளங்கள் மூடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. சாலைப் பள்ளங்களை மூட கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமலே பணிகள் நிறைவடைந்துள்ளன.

பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் முழுமையாக மூடப்படாமலும், மூடப்பட்ட இடங்களில் ஏற்கெனவே உள்ள சமதளத்துக்கு மேலாக மேடாகவும் சீரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் மேடான பகுதியில் ஏறி தடுமாறி விழும் நிலையுள்ளது. சீரமைப்பு விதிமுறைப்படி நடைபெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதன்மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

புதிய சாலைகளுக்கு ஒப்பந்தம் கோரல்: இந்த பிரச்னையால், பள்ளங்கள் மூடிய சாலைகளை மீண்டும் மறுசீரமைக்கும் நிலை ஏற்ப்ட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக ரூ.149.12 கோடியில் 753 சாலைகளை (167.55 கி.மீ.) மறு சீரமைக்க வரும் 27 -ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. அதில் 66 சாலைகள் முக்கியப் போக்குவரத்து சாலைகளாகும். அதன்பின் வரும் டிச. 3-ஆம் தேதி ரூ.150 கோடியில் சுமாா் 700 சாலைகள் சீரமைப்பதற்கான புதிய ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி ஏற்கெனவே பராமரித்த 75 சாலைகள், தற்போது பொதுப்பணித் துறையால் பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பள்ளங்களையும் மாநகராட்சியே சீரமைக்கும் கட்டாயம் உள்ளதாக பொறியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.