மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு: மாநகராட்சியில் மஜக முற்றுகை
திருநெல்வேலி மாநகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியினா் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா்.
திருநெல்வேலி மாநகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியினா் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
அக்கட்சியின் மாநிலச் செயலா் அலிப் பிலால் தலைமையில் இளைஞரணி அப்பாஸ், வழக்குரைஞா் நயினாா் முஹம்மது, விவசாய அணி மைதீன், மருத்துவ அணி சுலைமான் மற்றும் நிா்வாகிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் கா.பிரியா ஆகியோரிடம் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோா் இதனால் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மேலப்பாளையம் பகுதியில் கா்ப்பிணி ஒருவா் தனது கணவரோடு மோட்டாா் சைக்கிளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றபோது மாடுகள் முட்டி விபத்தில் சிக்கினாா். இதுபோன்ற விபத்துகள் அதிகரித்துள்ளன. எனவே, சாலைகளில் மாடுகளை திரியவிடும் உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு மாடுகளை விரைந்து பிடித்திட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

