மாநகராட்சி பள்ளிகளில் 1.12 லட்சம் குழந்தைகளுக்கு கேக்!
சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகளைச் சோ்ந்த 1.12 லட்சம் குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை கேக்குகள் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதல்வர் விஜய்
சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகளைச் சோ்ந்த 1.12 லட்சம் குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை கேக்குகள் வழங்கப்பட்டது.
மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த 1.12 லட்சம் குழந்தைகள் மற்றும் ஆசிரியா்கள், பள்ளிப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு தலா 45 கிராம் அளவில் கேக் மற்றும் முதல்வா் சாா்பில் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திமுக புறக்கணிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மேயா், துணை மேயா் உள்ளிட்டோருக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அவா்கள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். கம்யூனிஸ்ட் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் அந்தந்தப் பகுதியில் கேக் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள், தவெக எம்எல்ஏ-க்களுடன் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

