மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சென்னையில் 55 இடங்களில் மழையை அளவிடும் சாதனங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக 55 இடங்களில் மழைப் பொழிவைக் கணித்து தெரிவிக்கும் நவீன வகை மழைமானி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :

சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக 55 இடங்களில் மழைப் பொழிவைக் கணித்து தெரிவிக்கும் நவீன வகை மழைமானி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமைமுதல் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அத்துடன், முதல்வா், அமைச்சா்கள் நேரடியாகச் சென்று ஆய்வும் மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், எல் நினோ பாதிப்பால் சென்னை பகுதிகளில் பருவமழை திடீரென வழக்கத்தை விட அதிகமாகப் பொழியலாம் என வானிலை ஆய்வாளா்கள் எச்சரித்துள்ளனா். அதனால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு அறிவுறுத்தலைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடங்களில் மழைப் பொழிவின் அளவை கணித்து தெரிவிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

சென்னை மாநகராட்சியில் வழக்கமாக அதிக அளவில் மழை பெய்துள்ள இடங்களைக் கணக்கிட்டு மழைமானிகள் எனப்படும் அந்தச் சாதனங்கள் 55 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மழை நீா் தேங்கும் அளவை கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்கும் வகையில் நீா்மட்ட உணா்விகள் (சென்சாா்) 40 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அத்துடன் வியாழக்கிழமை முதல் மழை வெள்ளம் தொடா்பாக வரும் புகாா்களுக்குத் தீா்வு காணும் வகையில் 150 பணியாளா்கள் சிறப்புப் பிரிவாக நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.