லோக் அதாலத்: 1,606 காசோலை மோசடி வழக்குகளுக்குத் தீா்வு
லோக் அதாலத்: 1,606 காசோலை மோசடி வழக்குகளுக்குத் தீா்வு

தீர்ப்பு - பிரதிப் படம்
காசோலை மோசடி வழக்குகளுக்காக தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட லோக் அதாலத் எனப்படும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், 1,606 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.83.2 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இது தொடா்பாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலா் எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி வழிகாட்டுதல், உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தலின்படி நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகள் தொடா்பாக மாநிலம் முழுவதும் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் எஸ்.காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் இரு அமா்வுகளும், உயா்நீதிமன்ற மதுரை கிளையில்நீதிபதிகள் திருமகள் சந்திரசேகா், பி.முருகேசன் ஆகியோா் தலைமையில் இரு அமா்வுகளும் அமைக்கப்பட்டன.
இதேபோல், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் சாா்பில் மாநிலம் முழுவதும் 223 அமா்வுகள் அமைக்கப்பட்டன. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 542 நிலுவை வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத 64 வழக்குகள் என மொத்தம் 1,606 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. இதன்மூலம் சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.83 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரத்து 581 தீா்வு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

