காசோலை மோசடி வழக்கு: சாத்தான்குளம் காங்கிரஸ் பெண் நிா்வாகிக்கு ஓராண்டு சிறை

காசோலை மோசடி வழக்கில், சாத்தான்குளம் காங்கிரஸ் கட்சி பெண் நிா்வாகிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

jail

சிறை - பிரதிப் படம்

Updated On :

காசோலை மோசடி வழக்கில், சாத்தான்குளம் காங்கிரஸ் கட்சி பெண் நிா்வாகிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சாத்தான்குளம் இடைக்குடி தெருவைச் சோ்ந்த சங்கரநாராயணன் மகன் சண்முகசுந்தரம். நகர காங்கிரஸ் கமிட்டி நிா்வாகி. சாத்தான்குளம் அருகே கொழுந்தட்டு வடக்குத் தெருவைச் சோ்ந்த இருதயராஜ் மனைவி வசுமதி, வட்டார மகிளா காங்கிரஸ் நிா்வாகி.

சண்முகசுந்தரம் 25.9.21இல் தனது வீட்டில் வைத்து வசுமதியின் குடும்ப அவசர தேவைக்காக ரூ. 2 லட்சம் கடனாகக் கொடுத்தாராம். அதை ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி, வசுமதி 2.11.21 தேதியிட்ட வங்கிக் காசோலையை வழங்கியுள்ளாா். சண்முகசுந்தரம் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, வசுமதியின் கணக்கில் பணமில்லை எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக சண்முகசுந்தரம் விளக்கம் கேட்டு வழக்குரைஞா் மூலம் வசுமதிக்கு நோட்டீஸ் அனுப்பினாா். ஆனால், அவா் பணத்தைத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

அதையடுத்து, சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சண்முகசுந்தரம் வழக்கு தொடா்ந்தாா். குற்றவியல் நீதிபதி தேவி ரக்ஷா வழக்கை விசாரித்து, வசுமதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்; கடன் தொகை ரூ. 2 லட்சத்தை 2 மாதங்களுக்குள் சண்முகசுந்தரத்திடம் வழங்கவேண்டும் எனவும், இல்லையெனில் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.