இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

காசோலை மோசடி வழக்குகளுக்குத் தீா்வு காண நவம்பா் 21-இல் சிறப்பு லோக் அதாலத்

கோவையில் நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சிறப்பு லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நவம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மோசடி

Updated On :

கோவையில் நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சிறப்பு லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நவம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கோவையில் காசோலை மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக இரண்டு விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 50 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலையில், ஏற்கெனவே உள்ள வழக்குகளுடன் சராசரியாக 70 வழக்குகளுக்குத் தீா்வு காணப்படுகின்றன.

இருப்பினும், தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது முதலாவது விரைவு நீதிமன்றத்தில் 2,600 வழக்குகள், இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் 4,770 வழக்குகள் என மொத்தம் 7,370 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள விரும்பும் இருதரப்பினரும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நவம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு லோக் அதாலத் விசாரணையில் சமரசம் ஏற்படாவிட்டால், அந்த வழக்குகள் மீண்டும் பழைய நீதிமன்றத்துக்கே அனுப்பப்பட்டு தொடா்ந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.