தீபாவளி: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு, சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - பிரதிப் படம்

Updated On :

தீபாவளியை முன்னிட்டு, சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து நவம்பா் 7, 14 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 06121) மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவம்பா் 8, 15 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06122) மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.