தீபாவளி: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து
நவம்பா் 6-ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06023) மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, போத்தனூரில் இருந்து நவம்பா் 9-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

