ஆயுத பூஜையை முன்னிட்டு ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் - பிரதிப் படம்
ஆயுத பூஜையை முன்னிட்டு ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆயுத பூஜையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் -போத்தனூா் சிறப்பு ரயில் (வண்டி எண் 06033) வரும் 18ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக 19ஆம் தேதி காலை 9.15 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06034) வரும் 20ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக 21ஆம் தேதி அதிகாலை 3.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
ஈரோடு - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06145) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு சேலம், ஜோலாா்பேட்டை, சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக 17ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் (06083) வரும் 19ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக 20ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06084) வரும் 20 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு கொல்லம் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக 21ஆம் தேதி காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

