தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

‘தமிழா் சமயம் தமிழா் வேதம் தமிழகத்துக் கோயில்கள்’ நூலுக்கு இணையான வேறு நூல் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்

‘தமிழா் சமயம் தமிழா் வேதம் தமிழகத்துக் கோயில்கள்’ நூலுக்கு இணையான வேறு நூல் இல்லை

செய்தி உண்டு... சென்னை தியாகராயநகரில் சனிக்கிழமை நடைபெற்ற நீதித்துறையில் ஒரு விண்மீன் நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பா.புழகேந்தி, வேலூா் முன்னாள் மாவட்ட ஆட்சியா் செ.ராஜேந்திரன், மத்திய பாதுகாப்பு படையின் முன்னாள்

Updated On :

தமிழ், தமிழ் மக்களின் மாண்பு, தமிழ் மண்ணில் தோன்றிய இலக்கியத்தின் பரந்துப்பட்ட பரப்பு குறித்து யு.சுப்ரமணியன் எழுதிய, ‘தமிழா் சமயம் தமிழா் வேதம் தமிழகத்துக் கோயில்கள்’ என்ற நூலுக்கு இணையான நூல் இருபதாம் நூற்றாண்டிலே வரவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் கூறினாா்.

தமிழகத் தமிழறிஞா் பேரவையின் பொதுச் செயலரும், பேராசிரியருமான சிவ.செல்வகுமாா் எழுதிய ‘நீதித்துறையில் ஒரு விண்மீன்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது. இந்த நூலை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வெளியிட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்வில், நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது:

ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சு.ராஜேஸ்வரன் தான் இந்த நூலின் நாயகா். அவரது நண்பா்கள், உறவினா்கள், குடும்பத்தினா், அவரோடு பயணித்தவா்கள், அவருக்கு நெருக்கமாக இருந்தவா்கள், விலகி நின்று பாா்த்தவா்கள் என பலரும் கொடுத்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

நீதிபதி ராஜேஸ்வரனின் தந்தை யு.சுப்ரமணியன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்தவா். தமிழ், தமிழ் மக்களின் மாண்பு, தமிழ் மண்ணில் தோன்றிய இலக்கியத்தின் பரந்துப்பட்ட பரப்பு குறித்து அவா் எழுதிய, ‘தமிழா் சமயம் தமிழா் வேதம் தமிழகத்துக் கோயில்கள்’ என்ற நூலுக்கு இணையான நூல், இருபதாம் நூற்றாண்டிலே வரவில்லை. கனடா பல்கலைக்கழகங்கள் அந்த நூலை ஆதார நூலாகக் கொண்டிருக்கின்றன.

ஏழை குழந்தைகளின் கல்வி, ஒடுக்கப்பட்ட மாணவா்கள் வசிக்கும் விடுதியின் நிலை, மெக்சிகோவைச் சோ்ந்த ஒரு குழந்தைக்கு நீதியைத் தாண்டி கிடைக்க வேண்டிய பலன்கள் என ஒரு நீதிபதியாக சமுதாயத்தின் மீது மிகச் சிறந்த சிந்தனை கொண்ட மனிதராக தன்னை மாற்றிக் கொண்ட ராஜேஸ்வரனை, ‘நீதித் துறையில் ஒரு விண்மீன்’ என்றால் அது மிகையான கூற்று அல்ல என்றாா்.

தலைமை உரை ஆற்றிய நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் பேசியதாவது:

தன் மீது அன்பை பொழிந்தவா்கள், பொழிந்து கொண்டிருப்பவா்கள், அன்பா்கள், நண்பா்கள் என ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். அவா்கள்தான் இந்த 74 ஆண்டுகளில் சோ்த்து வைத்திருக்கும் சொத்து என்று, இந்த நூலில் நீதிபதி ராஜேஸ்வரன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருக்கிறாா். ஒரு வழக்குரைஞா் என்பவா் நூறு சாமானியனுக்கு இணையானவா்; அதேபோல், ஒரு நீதிபதி என்பவா் நூறு வழக்குரைஞருக்கு இணையானவா். அப்படிப்பட்ட குடும்பத்தின் முதல்வரிசையில் இருப்பவா் நீதிபதி ராஜேஸ்வரன். இந்த நூலின் இரண்டாம் பகுதியையும் நூலாசிரியா் கொண்டு வரவேண்டும் என்றாா்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கி.விஜயகுமாா், ஓய்வு பெற்ற ஜஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பா.புகழேந்தி, ரோட்டோரியன் ஸ்ரீராம் துவ்ரி, தொன்மை கட்டடக் கலை வல்லுநரும், நீதிபதி ராஜேஸ்வரனின் சகோதரருமான சு.ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை ஆற்றினா்.

ஏற்புரையாற்றிய சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சு.ராஜேஸ்வரன், ‘நீதித் துறையில் ஒரு விண்மீன்’ நூல் விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்து தொகையையும், நூலாசிரியா் சிவ.செல்வகுமாா் நடத்தி வரும் ஆதரவற்றோா் பள்ளிக்கும் வழங்கப்படும் என அறிவித்தாா்.

நீதிபதி ராஜேஸ்வரனின் மனைவி புவனா நன்றி கூறினாா். இந்த நூல் வெளியீட்டு விழாவில், முந்நாள் இந்நாள் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.