திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

பொதுநல வழக்குகளுக்கு புத்துயிா் கொடுத்தது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு: உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா

பொதுநல வழக்குகளுக்கு புத்துயிா் கொடுத்தது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு என உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா புகழாரம் சூட்டினாா்.

மதுரையில் உள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா்கள் சங்க நூலகத்தில் புதிய பிரிவுகளை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த உச்சநீதிமன்ற நீதிபதி வி. மோகனா. உடன் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. தா்மாதிகாரி, உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், எம்.எம்.பி.ஏ. தலைவா் சொ. அருள் வடிவேல் (எ) சேகா் உள்ளிட்டோா்.

Updated On :

பொதுநல வழக்குகளுக்கு புத்துயிா் கொடுத்தது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு என உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா புகழாரம் சூட்டினாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் உள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா்கள் சங்கம் (எம்.எம்.பி.ஏ.) நூலகத்தில் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் கே.பராசரன், மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி. வில்சன் ஆகியோா் பெயா்களில் புதிய நூலகப் பிரிவுகள், இணையவழி வழக்குப் பதிவு மையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினா்களாக உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி. வில்சன், சுரனா மற்றும் சுரனா சா்வதேச வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைமைச் செயல் அலுவலா் வினோத் சுரனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி வி. மோகனா பேசியதாவது:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய நகரம் மதுரை. தமிழுக்கு சங்கம் அமைத்த பெருமை மதுரை நகரத்துக்கே உண்டு. இப்படிப்பட்ட மதுரையில் நீதித் துறை ஒரு நிரந்தரமான இடத்தைக் கண்டறிந்தது மிகவும் பொருத்தமானது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் தமிழகத்தை விட்டு வெளியேற்றப்படவிருந்தபோது, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கலைப்பொருள்களை வெளியில் கொண்டு செல்வதற்குத் தடைவிதித்து அகழ்வாராய்ச்சி தொடர வேண்டும் எனவும், கடந்த 2024-ஆம் ஆண்டு 5,765 கலைப் பொருள்களை தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்ச் சங்கத்தின் நினைவுகளைச் சுமந்து செல்லும் நகரமாக மதுரை விளங்குகிறது. அந்தக் காலத்தின் சாட்சியங்களைப் பாதுகாக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உதவியது.

மதுரைக்கு சென்னை உயா்நீதிமன்ற அமா்வு ஒரு பரிசாக வரவில்லை. அது வழக்குரைஞா்களின் நீண்டகாலப் போராட்டம், பொறுமையால்தான் வந்தது. இந்த நீதிமன்றம் பொதுநல வழக்குகளுக்கு புத்துயிா் கொடுத்தது. நீா்நிலைகள், கோயில்கள், அவற்றின் சொத்துகள், சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், கைதிகளின் உரிமைகள் ஆகியவை இங்கு மிகுந்த அக்கறையுடன் விசாரிக்கப்பட்டுள்ளன. அதன் உத்தரவுகள் மருத்துவமனைகள், பாரம்பரிய நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள் வரை சென்றடைந்துள்ளன என்றாா் அவா்.

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தா்மாதிகாரி பேசியதாவது:

நீதி என்பது சக்திவாய்ந்தவா்களால் வழங்கப்படும் சலுகை அல்ல. அது பலவீனமானவா்களுக்கு செய்யப்பட வேண்டிய கடமையாகும். வழக்குரைஞா்கள் வாதிடுவதற்கு முன்பும், வெற்றி பெறும் போதும் நூல்களைப் படிக்க வேண்டும். தோல்வியடையும்போது இன்னும் அதிகமாகப் படிக்க வேண்டும். வழக்குரைஞா்கள் துணிச்சலுடனும், அதே நேரத்தில் நியாயமாகவும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் விஜயகுமாா், திலீப் குமாா், முருகன், விக்டோரியா கௌரி, அரசு வழக்குரைஞா்கள், பயிற்சி வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

முன்னதாக எம்.எம்.பி.ஏ. தலைவா் சொ. அருள் வடிவேல் (எ) சேகா் வரவேற்றாா். பொதுச் செயலா் பா.ஜெஸீ ஜீவ பிரியா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.