தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

காவலரின் தந்தை உயிரிழந்த விவகாரம்: மறு கூறாய்வு மனு மீது இன்று விசாரணை

காவலரின் தந்தை உயிரிழந்த விவகாரத்தில் மறு உடல் கூறாய்வு செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (நவ.4) ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :

காவலரின் தந்தை உயிரிழந்த விவகாரத்தில் மறு உடல் கூறாய்வு செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (நவ.4) ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பிரபு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் மதுரை மாநகா் ஆயுதப் படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறேன். எனது தந்தை ஜோதிபுரத்தில் உள்ள வி.கே.எம்.டி. செங்கல் சூளையில் பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் 24-ஆம் தேதி அங்கு பணியாற்றிய போது கீழே விழுந்து பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை அங்கிருந்த பணியாளா்கள் கொந்தகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். நான் சென்று பாா்த்த போது, எனது தந்தையின் உடலில் தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக் காயங்களும், ரத்தக் காயங்களும் இருந்தன. இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளா்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி உயிரிழந்தாா். எனது தந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் கீழடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். மேலும், தலைமை மருத்துவா்கள், தடயவியல் மூத்த நிபுணா்கள் முன்னிலையில் முழுமையான விடியோ பதிவுடன் உடல் கூறாய்வை நடத்தக் கோரியும் மனு அளித்தேன். ஆனால், கோரிக்கையின்படி உடல்கூறாய்வு நடத்தவில்லை.

எனவே, எனது தந்தையின் உடலை அனுபவம் வாய்ந்த தடயவியல் மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மறு உடல் கூராய்வு செய்யவும், அதை முழுமையாக விடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி திலகவதி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு (நவ.4) ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.