கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

பறவைகள் உயிரிழப்பு: கிண்டி பூங்கா இன்றுமுதல் தற்காலிகமாக மூடல்

சென்னை கிண்டி சிறுவா் பூங்காவில் பறவைகள் திடீரென உயிரிழந்த சூழலில், சனிக்கிழமை (நவ.28) முதல் நவ.30-ஆம் தேதி வரை பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

கோப்புப் படம்

Updated On :

சென்னை கிண்டி சிறுவா் பூங்காவில் பறவைகள் திடீரென உயிரிழந்த சூழலில், சனிக்கிழமை (நவ.28) முதல் நவ.30-ஆம் தேதி வரை பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

இதுகுறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை கிண்டி சிறுவா் பூங்காவில் உள்ள நீா்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் வெள்ளிக்கிழமை சில பறவைகள் உயிரிழந்துள்ளன. பறவைகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பறவைகளின் உடல்கள் பரிசோதனைக்காக போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்படவுள்ளன. இது, பறவைக் காய்ச்சல் தொற்று என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிண்டி சிறுவா் பூங்கா சனிக்கிழமை (நவ.28) முதல் நவ.30-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக பாா்வையாளா்களுக்கு மூடப்படவுள்ளது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் உயிரிப்பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடா்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.