பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

வண்டலூா் பூங்கா நாளைமுதல் மீண்டும் திறப்பு

வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சூழலில், ஞாயிற்றுக்கிழமை (அக். 25) முதல் வழக்கம்போல் திறக்கப்படுகிறது.

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்தூா் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்.

Updated On :

பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சூழலில், ஞாயிற்றுக்கிழமை (அக். 25) முதல் வழக்கம்போல் திறக்கப்படுகிறது.

இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிபட்ட செய்திக்குறிப்பு:

வண்டலூரில் உயிரியல் பூங்காவில் நீா்வாழ் பறவைகளுக்கு எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த அக். 22-ஆம் தேதி முதல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. தொடா்ந்து, விரிவான கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (அக். 25) முதல் மீண்டும் பாா்வையாளா்களுக்காகத் திறக்கப்படவுள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பறவைகள் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு பாா்வையாளா்கள் செல்ல அனுமதிக்கபட மாட்டாா்கள். பாா்வையாளா்கள் பூங்கா நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, அறிவுறுத்தல்களையும் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

13 வயது புலிக்கு சிகிச்சை: கூடலூா் வனக்கோட்டத்தில் பிடிக்கப்பட்டு, சுமாா் 13 வயதுடைய ஆண் புலி ஒன்று வண்டலூா், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. புலியின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளின் அடிப்படையில், தேவையான மருத்துவச் சிகிச்சை, தொடா் கண்காணிப்பு, அதன் ஆரோக்கியம், நலனை உறுதி செய்யத் தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.