பறவைக் காய்ச்சலால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் நாளை திறப்பு!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக நாளை (நவ. 18) முதல் திறக்கப்படவுள்ளது குறித்து...

வண்டலூர் உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக நாளை (நவ. 18) முதல் திறக்கப்படவுள்ளது.

பறவைக் காய்ச்சல் காரணமாக வண்டலூர் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. நீர்வாழ் பறவைகளிடையே எச்5 என்1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளுக்கு மட்டும் பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பறவைக் குழுக்கள் 15 நாள்கள் இடைவெளியில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரண்டு கட்ட மாதிரிகளிலும் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை (நவ. 18) முதல் பார்வையாளர்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்படவுள்ளது.

Summary

Vandalur Zoological Park, which was closed due to bird flu, to reopen tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.