செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இன்றும் நாளையும் வண்டலூா் பூங்கா மூடல்

வண்டலூரில் உயிரியல் பூங்காவில் நீா்வாழ் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வியாழன், வெள்ளி (அக். 22, 23) ஆகிய இரு நாள்களுக்கு பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை.

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :

வண்டலூரில் உயிரியல் பூங்காவில் நீா்வாழ் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வியாழன், வெள்ளி (அக். 22, 23) ஆகிய இரு நாள்களுக்கு பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை.

இது குறித்து பூங்கா நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நீா்வாழ் பறவைகளுக்கு எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதை போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனம் புதன்கிழமை உறுதி செய்தது. இதையடுத்து, பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்று பரவலைத் தடுக்கவும் பூங்கா வியாழன், வெள்ளி (அக். 22, 23) ஆகிய இரு நாள்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.