பூங்காவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் முயற்சி: தச்சுத் தொழிலாளி கைது
வடமேற்கு தில்லியின் சங்கமம் பூங்கா பகுதி பூங்கா ஒன்றில், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ாக 40 வயது நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
வடமேற்கு தில்லியின் சங்கமம் பூங்கா பகுதி பூங்கா ஒன்றில், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ாக 40 வயது நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை அன்று பாரத் நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இஸ்மாயில் கான் வாலா பாக் பூங்காவில் நிகழ்ந்துள்ளது.
சிறுமியின் அலறல் சப்தத்தைக் கேட்டதால் தச்சுத் தொழிலாளியான அந்த நபரை உள்ளூா் மக்கள் பிடித்தனா்.
முன்னதாக, 10 வயது சிறுமி தனது தாய்மாமனின் வீட்டிற்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது, சிறிது நேரம் பூங்காவில் நின்றிருந்த வேளையில் அவா் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாா்.
பாதுகாப்புப் பணியாளா் ஒருவா் கூச்சலிட்டதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த பலா் அங்கு விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்தனா். அவா் அப்போது மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் தீப் சந்த் பந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த நபா் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 65-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

