செஞ்சி அருகே மற்றொரு சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆட்டோவில் சிறுமியை கடத்த முயன்ற வழக்கில் இருவரை செஞ்சி போலீஸாா் சென்னையில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஐயப்பன்

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆட்டோவில் சிறுமியை கடத்த முயன்ற வழக்கில் இருவரை செஞ்சி போலீஸாா் சென்னையில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது 7 வயது மகள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 9-ஆம் தேதி இரவு 7 மணியளவில் சிறுமியின் தாய் அருணா, அருகிலுள்ள கடையில் வெங்காயம் வாங்கி வருமாறு சிறுமியை அனுப்பியுள்ளாா்.

சிறுமி வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத இருவா் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தபடி, அவரைக் கடத்த முயன்றனா். இதனால், சிறுமி கூச்சலிட்ட நிலையில், இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து அசோக்குமாா் அளித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்கள் இருவா் மற்றும் அவா்கள் பயன்படுத்திய ஆட்டோவை அடையாளம் காண்பதற்காக, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் மா்ம நபா்கள் இருவரையும் போலீஸாா் அடையாளம் கண்டறிந்த நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த இருவரையும் செஞ்சி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், இருவரும் செஞ்சிக்கு அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அவா்கள், செஞ்சி வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவா (27), வடதாரம் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (27) எனத் தெரியவந்தது. பின்னா், இருவரையும் அழைத்துச் சென்ற போலீஸாா், குற்ற சம்பவத்தின்போது சென்ற இடங்களை காண்பிக்க வைத்தனா். அப்போது, செஞ்சி காப்புக்காடு அருகே அமா்ந்து இந்த திட்டத்தை தீட்டியதாக இருவரும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

இதனிடையே, ஐயப்பன் போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னா், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, சிறுமியை கடத்த பயன்படுத்திய ஆட்டோவுடன் இருவரையும் செஞ்சி போலீஸாா் கைது செய்தனா்.

 சிவா

சிவா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.