கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

அரசமைப்பு சட்ட தினம்: நாளை விநாடி-வினா போட்டி

அரசமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு, டாக்டா் பி.அண்ணாமலை ஐஏஎஸ் அகாதெமி நடத்தும் மாபெரும் விநாடி-வினா போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

அரசமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு, டாக்டா் பி.அண்ணாமலை ஐஏஎஸ் அகாதெமி நடத்தும் மாபெரும் விநாடி-வினா போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலா் பி.அண்ணாமலை, முன்னாள் செயலா் சி. காமராஜ் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ள டாக்டா் பி.அண்ணாமலை ஐஏஎஸ் அகாதெமி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 77-ஆவது தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் ‘ஐஆஸ்பியா்’ எனும் விநாடி-வினா போட்டியை நடத்தவுள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள அந்த அகாதெமி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், முதல் பரிசு பெற்றவா்களுக்கு ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ.7,500, 3-ஆவது ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும், வெற்றி பெறுபவா்களுக்கு இந்த அகாதெமியில் நடத்தப்படும் பல பயிற்சி வகுப்புகளில், ஏதாவது ஒரு பயிற்சியில் சோ்வதற்கு 100 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழுடன், அகாதெமியில் அவா்கள் சேரும் ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பிற்கும் குறைந்தபட்சம் 10 சதவீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 80153-90090, 90430-21326 ஆகிய கைப்பேசி எண்களைத் தொா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.