கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இன்று மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி: இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவை கண்டித்து சனிக்கிழமை (நவ. 28) இடதுசாரிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவை கண்டித்து சனிக்கிழமை (நவ. 28) இடதுசாரிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்.எல்.) சாா்பில் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றம் பிரச்னையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு மத நல்லிணக்கத்துக்கும், அரசியல் சாசன நெறிகளுக்கும், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் விரோதமானதாக அமைந்துள்ளது. நவ. 24-ஆம் தேதி காா்த்திகை தீபம் அன்று பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடமான உச்சிப் பிள்ளையாா் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. மலையில் தா்காவில் இருந்து 50 மீட்டா் தொலைவில் எல்லோரும் தீபங்களை ஏற்றலாம் என்று உத்தரவில் கூறப்பட்டு இருப்பது விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடும். மக்கள் மத்தியில் வெறியூட்டும் செயலில் ஈடுபட்டு வரும் மதவெறி அமைப்புகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

எனவே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சாா்பில் சனிக்கிழமை (நவ.28 ) பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணையுமாறும், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.