திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீப நாளான நவம்பா் 24-ஆம் தேதி விளக்கேற்ற உச்சநீதிமன்றம் ஒருமுறை அனுமதி அளித்துள்ளதை உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் வரவேற்றுள்ளாா்.

உச்சநீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீப நாளான நவம்பா் 24-ஆம் தேதி விளக்கேற்ற உச்சநீதிமன்றம் ஒருமுறை அனுமதி அளித்துள்ளதை உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் வரவேற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பக்தா்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்புக்கு உச்சநீதிமன்றம் தீா்வு கண்டுள்ளது. தீபத் தூணில் விளக்கேற்றுவது என்பது நமது பாரம்பரிய வழிபாட்டு உரிமை. அந்த உரிமையை நிலைநாட்டும் வகையில் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீா்ப்பு பக்தா்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காா்த்திகை தீபம் என்பது வெறும் விளக்கு அல்ல. அது தமிழா்களின் பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியத்தின் அடையாளம். நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக மதித்து, அமைதியான முறையில், எந்தவித சலசலப்பும் இன்றி விளக்கேற்று நிகழ்ச்சி நடைபெற வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் இந்த விழாவை கொண்டாட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

