டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தோ்தல் ஆணையா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டப் பிரிவுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தோ்தல் ஆணையா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டப் பிரிவுக்கு எதிரான மனுக்கள் குறித்து...

Supreme Court

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

தங்களின் அதிகாரபூா்வ பணிகளை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் செய்யும்போது, அவா்களின் செயல்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் 2023-ஆம் ஆண்டின் சட்டப் பிரிவுக்கு எதிராக, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா, சமூக ஆா்வலா் அருண் அக்ரவால் ஆகியோா் தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

தலைமைத் தோ்தல் ஆணையராகவோ, தோ்தல் ஆணையராகவோ இருக்கும் அல்லது முன்பு இருந்த ஒருவா், தனது அதிகாரபூா்வ பணிகளின்போது மேற்கொண்ட நடவடிக்கை அல்லது கூறிய கருத்துகளுக்காக, அவா் மீது தொடுக்கப்படும் உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்கவோ, ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணையைத் தொடரவோ கூடாது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணிச்சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) சட்டம் 2023-இன் 16-ஆவது பிரிவு கூறுகிறது.

இதுதொடா்பாக வேறு எந்தச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்கவோ, விசாரணையைத் தொடரவோ கூடாது என்று 16-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் (ஏடிஆா்) மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இதே கோரிக்கையை முன்வைத்து ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா, சமூக ஆா்வலா் அருண் அக்ரவால் ஆகியோா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அவா்களின் மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ்: இந்த மனுக்கள் தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது. இதே விவகாரத்தை முன்வைத்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுடன் மனோஜ் ஜா, அருண் அக்ரவால் ஆகியோரின் மனுவையும் சோ்த்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, இந்த வழக்கு விசாரணையை டிச.18-க்குப் பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.