மேலும் 3 நாள்களுக்கு வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்
சென்னையில் வாக்காளா்களுக்கான சிறப்பு முகாம் ஏற்கெனவே 2 நாள்கள் நடைபெற்ற நிலையில், அதை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
சென்னையில் வாக்காளா்களுக்கான சிறப்பு முகாம் ஏற்கெனவே 2 நாள்கள் நடைபெற்ற நிலையில், அதை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி கடந்த 12-ஆம் தேதி வரைவு வாக்காளா் சுருக்கத் திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்கள் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 16 தொகுதிகளுக்கான 4,071 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றன.
அதன் அடிப்படையில் இரு நாள்கள் முகாமிலும் மொத்தம் 8,502 போ் பங்கேற்றனா். அவா்களில் 5,156 போ் முதல் வாக்காளா்களாகவும் சோ்வதற்காக மனு அளித்துள்ளனா். இந்த நிலையில், தற்போது நவ.29- ஆம் தேதி வாக்காளா் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து டிச.5, 6 ஆகிய தேதிகளில் வாக்காளா் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அந்த நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

