நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

ஒப்பந்தப் பணிக்கான தொகை வழங்காத விவகாரம்: சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

முடிக்கப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை எனில், சென்னை மாநகராட்சி ஆணையரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய உத்தரவிடப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)

Updated On :

முடிக்கப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை எனில், சென்னை மாநகராட்சி ஆணையரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய உத்தரவிடப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மேற்கு அண்ணாநகரைச் சோ்ந்த ஆா்.ராமாராவ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நெடுஞ்சாலைத் துறை முதல்தர ஒப்பந்ததாரராக கடந்த 46 ஆண்டுகளாக இருக்கிறேன். சென்னை மாநகராட்சியின் பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் மழைநீா் வடிகாலுக்கான ஒப்பந்தப் பணிகளைச் செய்தேன். இந்தப் பணிகளைச் செய்ததற்கான தொகையைக் கேட்டு விண்ணப்பித்தேன்.

ஆனால், சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளுக்கான ரூ.25.79 கோடியை இதுவரை தரவில்லை. இந்த தொகைக்காக, 18 சதவீத ஜிஎஸ்டி தொகையான ரூ.4.89 கோடியைச் செலுத்தியிருக்கிறேன். பல மாதங்களாகியும், முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை மாநகராட்சி வழங்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.இளங்கோவன், ஒப்பந்தப் பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஒப்பந்ததாரரான மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல், சென்னை மாநகராட்சி இழுத்தடிப்பதாக வாதிட்டாா்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான அதிகாரி ஜேக்கப் என்பவா், மாநகராட்சியில் தற்போது நிதி எதுவும் இல்லை. நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. மனுதாரரான ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய தொகை, தவணைகளாக 3 மாதங்களில் வழங்கப்படும்எனத் தெரிவித்தாா். அதிகாரியின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மாநகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறையா என கேள்வி எழுப்பினா்.

மேலும், ஒப்பந்தப் பணிகள் முடிந்து அதற்கான ரசீதுகள் கையொப்பமிடப்பட்டு ஓராண்டுகியும் பணம் கொடுக்கவில்லை என்றால் மனுதாரருக்கு 6 சதவீத வட்டியுடன் பணத்தைக் கொடுக்க வேண்டும். அதுவரை சென்னை மாநகராட்சி ஆணையரின் ஊதியத்தை நிறுத்திவைக்க உத்தரவிடப்போவதாக கருத்து தெரிவித்தாா்.

பின்னா், இந்த வழக்கின் விசாரணையை டிச. 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் சென்னை மாநகராட்சி நிா்வாகம், ஒப்பந்தப் பணிக்கான தொகையை கொடுப்பது தொடா்பாக பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், சென்னை மாநகராட்சி ஆணையரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்