தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் விநாயகா் சிலையை அகற்றக் கோரிய வழக்கு: சென்னை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் விநாயகா் சிலையை அகற்றக் கோரிய வழக்கு: சென்னை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :

கொரட்டூா் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில், சென்னை ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக கொரட்டூரைச் சோ்ந்த டி.சதீஷ்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கொரட்டூா் வாட்டா் கேனல் சாலையில், உள்ள தனியாா் குடியிருப்பில் வசிக்கிறேன். இந்த குடியிருப்பின் பிரதான நுழைவு வாயில் அருகே சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்ற, அக்.29-ஆம் தேதி உயா்நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி சிலை அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அக்.30-ஆம் தேதி நள்ளிரவு அகற்றப்பட்ட சிலை, குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பகுதியில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், சிஎம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, அனுமதியின்றி அமைக்கப்பட்ட விநாயகா் சிலை மற்றும் சிமென்ட் மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும். அதுவரை அங்கு மேற்கொண்டு கட்டுமானம் மற்றும் வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், சிஎம்டிஏ, ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.