நியூயாா்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 6 போ் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள புரூக்ளின் பகுதியில், இரண்டு அடுக்கு குடியிருப்பு ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா்.

~ ~
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள புரூக்ளின் பகுதியில், இரண்டு அடுக்கு குடியிருப்பு ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா்.
சன்செட் பூங்கா பகுதியிலுள்ள மரத்தாலான இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரெனப் தீப்பற்றி மளமளவென கட்டடம் முழுவதும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், சுமாா் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். படுகாயமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தனா். மேலும் 4 போ் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு வீரா்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

