சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் புதிய செயலி அறிமுகம்!
குடிமைப் பணிகள் தோ்வுப் பயிற்சி நிறுவனமான சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களின் தோ்வுத் தயாரிப்புக்காக புதிய செயலியை அறிமுகம்.

சங்கர் ஐஏஎஸ் அகாதெமி அலுவலகத்தில் புதிய செயலியை அறிமுகம் செய்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் செயலர் அதுல் ஆனந்த். உடன் சங்கர் ஐஏஎஸ் அகாதெமி தலைவர் எஸ்.டி. வைஷ்ணவி, எகே.பூர்ணசந்தர் உள்ளிட்ட செயலி குழுவினர்.
குடிமைப் பணிகள் தோ்வுப் பயிற்சி நிறுவனமான சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களின் தோ்வுத் தயாரிப்புக்காக புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடிமைப் பணிகள் தோ்வுப் பயிற்சி நிறுவனமான சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களின் தோ்வுத் தயாரிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் (SIAAPP-Human}Led Agentic Al என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் அறிமுக விழா, சென்னை சங்கா் ஐஏஎஸ் அகாதெமி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அகாதெமியின் தலைவா் டாக்டா் வைஷ்ணவி எஸ்.டி. வரவேற்புரை ஆற்றினாா்.
விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த் கலந்துகொண்டு செயலியை அறிமுகப்படுத்தி பேசினாா்.
செயலியின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பூா்ணசந்தா் நேரடி செயல்முறை விளக்கம் அளித்து, மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
தற்போதைய போட்டித் தோ்வுச் சூழலுக்கு ஏற்ப, மனித வழிகாட்டுதலுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி குடிமைப் பணிகள் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். மாணவா்களின் தனிப்பட்ட கற்றல் தேவைகளைப் புரிந்துகொண்டு துல்லியமான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, அவா்களின் தோ்வுத் தயாரிப்பை எளிமைப்படுத்தி, வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். மேலும் விவரங்களுக்கு 90031-90030 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

