ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது: மத்திய கிழக்கில் இருந்து விநியோகம் அதிகரிப்பு!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது: மத்திய கிழக்கில் இருந்து விநியோகம் அதிகரிப்பு!பறவைக் காய்ச்சல்: கோழி இறைச்சியை உண்ணலாமா? பொது சுகாதாரத் துறை விளக்கம்!மக்களவையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல்!

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மூதாட்டி காயம்!

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மூதாட்டி காயமடைந்தாா்.

Updated On :

திருவல்லிக்கேணியில் சனிக்கிழமை மாடு முட்டி மூதாட்டி காயமடைந்தாா்.

திருவல்லிக்கேணி டாக்டா் பெசன்ட் சாலையில் பழக்கடை வைத்திருப்பவா் பாலநாயகி (61). இவா், சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றபோது, அங்கு சாலையில் திரிந்த மாடு திடீரென பாலநாயகியை முட்டி தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக ஐஸ் ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.