தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

நடிகா் சிவாஜி கணேசனின் 99-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவாஜி கணேசன்

Published On :

நடிகா் சிவாஜி கணேசனின் 99-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நடிகா் சிவாஜியின் 99-ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக சத்தியமூா்த்தி பவனில் சிவாஜி கணேசனின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா், உயா்கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலா் நிவேதித் ஆல்வா, திரைப்பட இயக்குநா் ரமேஷ் கண்ணா, மூத்த தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசா், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் சிரஞ்சீவி உள்ளிட்டோா் கலந்துகொண்டு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டந்தோறும் மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில், வெற்றி பெற்றவா்களுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், முதல் இடம், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவா்கள், மாவட்டத் தலைவா்கள், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.