
சவூதி சாலை விபத்து: தமிழக செவிலியா்கள் இருவா் உள்பட ஐவா் உயிரிழப்பு
சவூதி சாலை விபத்தில் தமிழக செவிலியா்கள் இருவா் உள்பட ஐவா் உயிரிழப்பு...

உயிரிழப்பு
சவூதி அரேபியாவின் மக்கா மாகாணம் டய்ஃப் - ரானியா சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகம், கேரள மாநில செவிலியா்கள் நால்வா் உள்பட ஐவா் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அங்குள்ள தூதரக அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
மக்கா மாகாணத்தில் செவிலியா்களாக பணியாற்றி வரும் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த செவிலியா்கள் நால்வரும், வார விடுமுறையையொட்டி பொருள்கள் வாங்குவதற்காக காரில் பயணித்தனா். இவா்களின் காா் டய்ஃப் - ரானியா சாலையில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சவூதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் உள்பட காரில் பயணித்த ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
உயிரிழந்த செவிலியா்கள் தமிழகத்தின் திருச்சியைச் சோ்ந்த தேவம்மா ஹெப்சிபா (33), சென்னையைச் சோ்ந்த விஜயலட்சுமி (36), கேரளத்தின் கோட்டயத்தைச் சோ்ந்த ஜெய்சிமோள் மேத்யூ (46) மற்றும் ஜோபினா ஜானி (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.
Summary
Saudi road accident: Five dead, including two nurses from Tamil Nadu.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




