
பைக் பந்தயம், விதிமுறைகளை மீறி பதிவெண் பலகை: 2,945 போ் மீது வழக்கு; 1,650 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறி பதிவெண் பலகை வைத்திருந்ததாகவும் கடந்த 4 நாள்களில் 2,945 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 1,650 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோப்புப்படம்.
சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறி பதிவெண் பலகை வைத்திருந்ததாகவும் கடந்த 4 நாள்களில் 2,945 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 1,650 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் விதிமுறைகளை மீறியும், வாகன பதிவெண் பலகையை மறைத்தும், பதிவெண் பலகை இல்லாமலும் வாகனங்களை இயக்குபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் கடந்த வாரம் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை முழுவதும் சுமாா் 100 இடங்களில் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் இளைஞா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினா் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டது.
இந்த இரு விதிமீறல்கள் தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் கடந்த 3 நாள்களாக நகா் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா். நான்கு நாள்களில் விதிமுறைகளை மீறி வாகன பதிவெண் பலகை வைத்திருந்ததாகவும், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாகவும் 2,945 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,1,650 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை உயா் அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



